பிரச்னையை கூறுவோம்: தீர்வு காண்போம்

Added : பிப் 13, 2020
Advertisement

மூடப்படாத குழி
சிவகாசி விஸ்வநத்தத்தில் இருந்து ரோட்டரி பள்ளி செல்லும் வழியில் குழிகள் தோண்டப்பட்டு இதுவரை மூடப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
-ரவீந்திரன், விஸ்வநத்தம்.

குண்டும் குழியுமான ரோடு

விருதுநகர் அரசு மருத்துவமனை செல்லும் ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. டூவீலர்களில் வருவோர் பள்ளத்தில் மாட்டி விபத்தில் சிக்குகின்றனர். அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துச்சாமி, விருதுநகர்.

தாழ்வான மின்பெட்டி

விருதுநகர் பாவாலி ரோடு கல்பள்ளிவாசல் காம்ப்ளக்ஸ் அருகில் மின்கம்ப இணைப்பு பெட்டியானது குழந்தைகள் தொடும் அளவிற்கு தாழ்ந்து காணப்படுகிறது. ரோடு ஏற்றமாக போடப்பட்டதால் தரையில் இருந்து 3 அடி உயரம் கூட இல்லை. தெருவோரம் விளையாடும் சிறுகுழந்தைகள் திடீரென தொட்டுவிட்டால் விபரீதம் ஏற்பட்டு விடும். மின்துறை ஊழியர்கள் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாதிக், விருதுநகர்.

தெருவிளக்குகள் எரியவில்லை

ராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரத்தில் 60 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், ராஜபாளையம்.

தலைவலி தரும் ஆக்கிரமிப்புகள்

விருதுநகர் ஒன்றியம் ஆமத்துாரில் பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. பயணிகள் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம், வருவாய் அதிகாரிகள் முன்வர வேண்டும்.
- ராம், ஆமத்துார்.

ரோடு வசதி சரியில்லை
வத்திராயிருப்பு ஒன்றியம் சுந்தரபாண்டியம் பேரூராட்சியை அடுத்த ராமச்சந்திராபுரத்தில் ரோடு வசதி மிகவும் மோசமாக உள்ளது. நோயாளிகள், பெண்கள் செல்ல முடிவதில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.கண்ணன், ராமச்சந்திராபுரம்.

மணல் அள்ளும் தனிநபர்கள்

ராஜபாளையம் சமுசிகாபுரம் செங்குளம் கண்மாயில் மண்ணை அள்ளுகின்றனர். பாறை வரும் அளவுக்கு மண்ணை அள்ளியுள்ளனர். இதே நிலை நீடித்தால் கண்மாய் குவாரி ஆகிவிடும். தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலகிருஷ்ணன், ராஜபாளையம்.

ரோடு வசதியில்லை

பாவாலி ஊராட்சிக்குட்பட்ட சங்கரநாராயணபுரத்தில் ரோடு வசதி இல்லை. நிதிநிலையை காரணம் காட்டி பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இன்று வரை ரோடு போடவில்லை. வெறும் ஜல்லிகற்கள் மட்டுமே கொட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

- நாகராஜ், கூலித்தொழிலாளி, விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X