மீன் துறை ஏலத்தால் தவித்த குடியிருப்பு வாசிகள் பேரிகார்டு அமைத்து இடையூறு செய்த போலீசார்

Added : பிப் 13, 2020
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் மீன் துறை சார்பில் நடந்த ஏலத்ததால் போலீசார் பாதையை மறித்து பேரி கார்டு அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர்.இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தவித்தனர்.

விருதுநகர் வேலுச்சாமி நகரில் வாடகை கட்டடத்தில் மீன்வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 13 நீர்பாசன குளங்களுக்கான மீன்பாசி குத்தகைக்கான ஏலம் நடந்தது. இதில் பங்கேற்க அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக குறுகலான இத்தெருவில் வாகனங்கள் படையெடுத்தன. வெளிநபர்களும் குவிந்தனர். போலீசாரும் வேலுசாமிநகர் தெருவை மறித்து பேரிகார்டு வைத்தனர்.

இந்த இடையூறால் அப்பகுதியில் குடியிருப்போர், அலுவல் பணி மேற்கொள்வோர் சிரமத்தை சந்தித்தனர். குடியிருப்பு பகுதிகளில் இது போன்ற அரசு அலுவலகங்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வது விரும்ப தகாத செயலாகும். ஏலத்தில் பிரச்னை ஏற்பட
வாய்ப்புள்ளது என்பதால் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் அப்பகுதியினர் அச்சத்துடனே இருந்தனர். பொதுவாக ஏலத்தில் அரசியில் தலையீடு பலமாக இருக்கும். இதனால் மோதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இது போன்ற ஏலம் நடத்தும் அலுவலகங்களை கலெக்டர் அலுவலகம், வெளிப்பகுதியில் மக்களுக்கு
இடையூறு இல்லாத இடத்தில் ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் நடத்துவதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

நேற்று காலை டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் பகல் 3:00 மணிக்கு ஏலம் நடைப்பெறுவதாக இருந்தது.ஆனால் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்க ஏலத்தில்
பங்குபெற வந்தவர்கள் திரும்பினர். இதன் பிறகே அப்பகுதி குடியிருப்பு வாசிகள்
பெருமூச்சுவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X