பொது செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையத்தில் தி.மு.க., உண்ணாவிரதம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் குடிநீர் மற்றும் மேம்பால பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தி தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ராஜபாளையம் பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இப்பணிகளை விரைவுப்படுத்த கோரி தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.தென்காசி

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் குடிநீர் மற்றும் மேம்பால பணிகளை விரைவு படுத்த
வலியுறுத்தி தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ராஜபாளையம் பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இப்பணிகளை விரைவுப்படுத்த கோரி தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.டி.எஸ்.பி., நாகசங்கர், நகராட்சி இன்ஜினியர் நடராஜன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜாமணி, நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் முரளி மற்றும் மேம்பால ஒப்பந்தகாரர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 3 மாதங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்படும் .

மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தப் பட்ட பின் 8 மாதங்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளிக்க போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X