பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை விளையாட்டு: விழுப்புரத்தில் 15ம் தேதி துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

விழுப்புரம்:முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 15ம் தேதி துவங்குகிறது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட பிரிவால் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.மாவட்ட போட்டிகளில் 25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். 1.1.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். போட்டிகளில் பங்குபெற விரும்புபவர்கள்www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிறந்த தேதிக்கான சான்றிதழ், கல்வி நிறுவன அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழ். வங்கி கணக்கு புத்தகம் ஆகியவைகளின் நகல்களை போட்டி நடைபெறுவதற்கு முன் அளிக்க வேண்டும்.போட்டிகள் காலை 9:00 மணிக்கு தொடங்கும். தாமதமாக வரும் வீரர்கள் கண்டிப்பாக போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.விழுப்புரம் விளையாட்டு அரங்கில் 15ம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து மற்றும் கலெக்டர் அலுவலக வளாக உள்விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடக்கிறது.16ம் தேதி மாவட்ட விளையட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு டென்னிஸ் மற்றும் குத்துச்சண்டை, ஜூடோ, மாவட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, துாய இருதய மெட்ரிக் பள்ளியில் பெண்களுக்கு ஹாக்கி, கூடைப்பந்து மற்றும் 17ம் தேதி விளையாட்டரங்கத்தில் தடகள போட்டி நடக்கிறது.வீரர், வீராங்கனைகள்www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில்sdat online applicationல் நாளை 14ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். பதிவு செய்யாதவர்கள் கண்டிப்பாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.மாவட்ட அளவிலான குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றிபெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக 1000 ரூபாய், 2ம் பரிசாக 750 ரூபாய், 3ம் பரிசாக 500 ரூபாய் காசோலையாக வழங்கப்படும்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 9943509394, 8675773551, 7401703485 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X