பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement

விழுப்புரம்;விக்கிரவாண்டி, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விக்கிரவாண்டி - கும்பகோணம், தஞ்சாவூர் பிரிவு தேசிய நெடுஞ்சாலை எண். 45ல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பொருட்டு விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தாலுகாக்களில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் அளித்திட்ட மற்றும் நில கையகத்திற்கு இழப்பீட்டுத் தொகையினை இதுநாள் வரை பெற்றுக்கொள்ளாத நில உடமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை உடன் பட்டுவாடா செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, நில உடமைதாரர்கள் தங்கள் நிலம் தொடர்பான அசல் ஆவணங்கள், வாரிசு சான்று, இறப்பு சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் அந்தந்த கிராமங்களில் நில எடுப்பு தனி தாசில்தார் தலைமையில், அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது ஆஜராகி, ஆவணங்களை கொடுத்து இழப்பீட்டு தொகையை பெற்றுகொண்டு பயனடையலாம்.
இம்முகாம், வரும் 17ம் தேதி முற்பகல் சாலையாம்பாளையம் (மேற்கு) பனையபுரம், பிற்பகல் மழவராயனுார், பனப்பாக்கம். 18ம் தேதி முற்பகல் வேங்கடதிரி அகரம், கப்பியாம்புலியூர், பிற்பகல் பஞ்சமாதேவி, குச்சிப்பாளையம் (வடக்கு). 19ம் தேதி முற்பகல் அரசமங்கலம், மேல்பாதி மற்றும் பிற்பகல் கள்ளிப்பட்டு, மாதிரிமங்கலம். 20ம் தேதி கோலியனுார், பனங்குப்பம் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X