எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'15ம் தேதி வினியோகம்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020
Advertisement
 இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'  15ம் தேதி வினியோகம்

வாகன உரிமையாளர்களுக்கு, இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' வினியோகம், நாளை மறுநாள் துவங்குகிறது.
நாடு முழுவதும், 'எலட்ரானிக்' முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக, 'பாஸ்டேக்' திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளது. தேசிய மற்றும் தனியார் வங்கிகள், 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள், 'மொபைல் நெட்வொர்க்' நிறுவனங்கள் வாயிலாக, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்'கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஸ்டிக்கருக்கு மட்டும், 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ஸ்டிக்கர்களை வாங்கி, எவ்வளவு தொகைக்கும், 'ரீசார்ஜ்' செய்யலாம். சுங்கச்சாவடியை கடக்கும்போது, அந்த தொகையில் இருந்து, கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். வங்கி கணக்கில் இருந்தும், நேரடியாக பணத்தை கழிக்கும் வசதியும் உள்ளது. வாகன ஓட்டிகளிடம், 'பாஸ்டேக்' குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால், ரொக்க கட்டணம் செலுத்தி, பயணித்து வருவதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இந்நிலையில், நாளை மறுநாள் முதல், 29ம் தேதி வரை, வாகன உரிமையாளர்களுக்கு, இலவச, 'பாஸ்டேக் ஸ்டிக்கர்' வழங்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு அருகே அமைக்கப்பட்டு உள்ள, 'கவுன்டர்'களில் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ராஜிவ் காந்தி சாலைகளில் உள்ள, ஐந்து சுங்கச்சவாடிகளில், 'பாஸ்டேக்' கட்டணம் வசூலிக்கும் முறை, நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X