பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை பாதுகாக்கும் காலணி: தஞ்சை கல்லூரி மாணவியர் கண்டுபிடிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

தஞ்சாவூர்: ஆபத்தில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில், தஞ்சை கல்லூரி மாணவியர், புதிய காலணியை கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர், அமிர்தகணேஷ், 33; பி.இ., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர் விவசாயம், ராணுவம், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு தேவையான, 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்துள்ளார். தஞ்சையில், தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் சங்கீதா, சவுந்தர்யா, வினோதினி மற்றும் மணிகண்டன் ஆகியோர், இவருடன் இணைந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சில்மிஷத்தில் ஈடுபடுவோரிடம் இருந்து, பெண்களிடம் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், புதிய கருவி ஒன்றை உருவாக்கி, அதை, காலணியின் அடிப்பகுதி யில் பொருத்தியுள்ளனர். 'ஒயர்லெஸ் ரிசீவர், பேட்டரி, எலக்ட்ரோடு' ஆகியவற்றால், சிறிய அளவிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர். இது பொருத்தப்பட்ட காலணியை அணிந்து செல்லும்போது, யாரேனும் அத்துமீறலில் ஏற்பட்டால், பெண்ணின் உடலில் ஏற்படும் படபடப்பு அதிகரிப்புக்கு ஏற்ப, காலணியில் பொருத்தப்பட்டுள்ள கருவி, இயங்கத் துவங்கி விடுகிறது. அதை தொடர்ந்து, 100 மீ.,க்கு கேட்கும் அளவிற்கு, அலாரம் ஒலிப்பதோடு, எதிரியின் மீது காலணியை வைத்தால், 'ஷாக்' அடிக்கும் வகையிலும், கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காலணியில் பொருத்தபட்டுள்ள கருவிக்கு, 'ஜார்ஜ்' போட வேண்டிய அவசியமில்லை. காலணியை அணிந்து நடக்கும் போதே, 'ரீசார்ஜ்' ஆகும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை மொபைல் போன், வாட்ச் போன்ற பொருட்களிலும் பொருத்தலாம்.

இது குறித்து, மாணவியர் கூறியதாவது; கல்லூரிக்கு செல்லும் வழியில், இரண்டு, 'டாஸ்மாக்' கடைகளை கடக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று திரும்பும் போது, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், அமிர்தகணேஷ் என்பவருடன் இணைந்து, இந்த கருவியை கண்டுபிடித்துள்ளோம். முதற்கட்டமாக, இந்தக் கருவியை, நாங்கள் அணிந்து, கல்லூரிக்கு செல்ல இருக்கிறோம். இக்கருவி, எங்களுக்கு உதவியாக இருந்தால், முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X