பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

Added : பிப் 13, 2020
Advertisement

வேலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தொடங்கியது. ஆர்.டி.ஓ., கணேஷ் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டியில், மாவட்டத்தில் உள்ள, 12 மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், தடகளம், இறகு பந்து, கபடி, எறிபந்து, குண்டு எறிதல் என, பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டிலும் முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள், சென்னையில் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X