பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல்: தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் சாடல்

Added : பிப் 13, 2020
Advertisement

வேலூர்: ''அத்திகாயை பிளந்தால் சொத்தையை போல, தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் உள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 16 கோடியே, 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை, வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ., துரைமுருகன், உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர், துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்பட, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. அதுபோல் தான், இந்த அறிவிப்பும் உள்ளது. இந்த அறிவிப்பு செயல் வடிவத்துக்கு வரட்டும், அதன்பின் பார்க்கலாம். வருங்காலங்களில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்களையும் செயல்படுத்த மாட்டோம் என, வெறும் பேச்சளவில் அறிவித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு என்பது வழக்கமான ஒன்றுதான். லோக்சபா தேர்தலில் மட்டும், பா.ஜ., அதிக இடங்களை பெற்றது. அதன்பின் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும், அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பாதிக்காமல் இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். டி.என்.பி.எஸ்.சி., - வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. அத்திகாயை பிளந்தால், சொத்தையை போல, ஊழல் ஒவ்வொன்றும் வெளிவர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X