சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அட்சய பாத்திரம் எனக்கூறி ரூ.2 கோடி மோசடி: 8 பேர் கும்பல் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

வேலூர்: அட்சய பாத்திரம் எனக்கூறி, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரிடம் சிலர், புதையலை கண்டுபிடிக்கக்கூடிய அட்சயபாத்திரம் தங்களிடம் இருப்பதாகக்கூறி பேட்டரியால் செய்த மின்விளக்குகளை கொடுத்து, கடந்த, 2019 டிச.,11ல், இரண்டு கோடியே, பத்து லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். இது குறித்து, நவீன்குமார் குடிபள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம், குடிப்பள்ளி ரயில்?வே ஸ்டேஷன் அருகே, போலீசார் வாகன சோதனையில், அவ்வழியாக காரில் வந்த ஒரு கும்பல், போலீசாரை பார்த்தவுடன், காரை நிறுத்தி விட்டு தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச்சென்று, எட்டு பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், அட்சய பாத்திரம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிந்தது. இதில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மகாதேவா, 42, கங்காதர், 30, சிவகுமார், 19, தனசேகர், 35, கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தூர் ராமச்சந்திரா, 40, வேப்பனப்பள்ளி சேகர், 28, சித்தூர் கொதபள்ளியை சேர்ந்த சீனப்பா, 35, காஞ்சீபுரம் மாவட்டம், ராஜகுளத்தை சேர்ந்த விநாயகம், 35, என தெரிந்தது. அவர்களிடமிருந்து ஒரு கோடியே, 32 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய், இரண்டு கார், ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X