பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூர் கவுன்சிலர்களின் முதல் கூட்டத்தில் வெட்டவெளிச்சமான அடிப்படை பிரச்னை

Added : பிப் 13, 2020
Advertisement

ஓமலூர்: ஓமலூரில் நடந்த, கவுன்சிலர்களின் முதல் கூட்டத்தில், பல்வேறு அடிப்படை பிரச்னைகள் உள்ளது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.
ஓமலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், கவுன்சிலர்களின் முதல் கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், வெள்ளாளப்பட்டியில் சாக்கடை கால்வாய் சேதமாகி, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது; அங்கன்வாடி கட்டடம் அருகே, சேதமடைந்த கிணறு உள்ளதால், விபத்து அபாயம் நிலவுவது குறித்து, புகார் தெரிவிக்கப்பட்டது. பெரியேரிப்பட்டியில், ஒரே குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதால், பல தொட்டிகளுக்கு செல்வதில்லை; டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தி பணி நிரந்தப்படுத்தல்; முத்துநாயக்கன்பட்டியிலுள்ள மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றுதல்; அம்மா பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல்; டெங்கு ஒழிப்பு பணிக்கு, ஊராட்சி நிதி, ஒன்றிய நிதி பயன்படுத்துவதை தவிர்த்து, ஊராட்சியிடமே ஒப்படைக்கலாம் என்ற கோரிக்கைகள், பி.டி.ஓ., முருகனிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒன்றிய அலுவலக நிதிநிலை குறித்து, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'கடந்த ஜன., 31 வரை, 45 லட்சத்து, 25 ஆயிரத்து, 550 ரூபாய் அலுவலக வங்கி கணக்கில் உள்ளது. ஒரு கோடியே, 20 லட்சம் ரூபாய்க்கு பணி நடந்து வருகிறது. டி.என்.ஆர்.ஐ.எஸ்., திட்டப்பணிக்கு, ஒன்றரை கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. போதிய நிதியில்லாததால், தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது' என, முருகன் தெரிவித்தார். பின், 10 விவாத பொருள் ஒப்புதலுடன், கூட்டம் நிறைவடைந்தது.

69 தீர்மானம்: கெங்கவல்லி, ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் ப்ரியா தலைமையில் நடந்தது. அதில், பி.டி.ஓ., செந்தில், 'நாகியம்பட்டி, நடுவலூர் ஊராட்சிகளில், தலா, 70 லட்சம் ரூபாயில் நவீன சமுதாய நலக்கூடம் கட்ட, 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது' என்றார். அப்போது, உலிபுரம், பச்சமலை, ஒதியத்தூர், கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், 'தங்கள் பகுதிக்கும் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்; கொண்டையம்பள்ளியில், அங்கன்வாடி மையம் வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக், பச்சமலையில் பொதுக்கிணறு, குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுக்க வலியுறுத்தினார். ப்ரியா, 'சிறப்பு நிதி பெற்று, அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரப்படும்' என தெரிவித்தார். தொடர்ந்து, 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X