பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வடங்கம் கோவில் அருகே சுற்றுலா வளர்ச்சி பணி'

Added : பிப் 13, 2020
Advertisement

சங்ககிரி: சங்ககிரி தாலுகா அலுவலகத்தில், கல்வடங்கம், அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தாசில்தார் பாலாஜி தலைமை வகித்தார். அதில், திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன், பணி குறித்து, அரசு துறையினரிடம் கலந்தாலோசித்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்பது குறித்து, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, ஆய்வு நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, கல்வடங்கம், அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா, வரும், 24 முதல், 26 வரை நடக்கவுள்ளதால், முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், பொதுப்பணி, சுற்றுலாத்துறை இணைந்து, கல்வடங்கம் கோவில் அருகே, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுலா வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படும். தேவூர், சொக்கநாச்சியம்மன் கோவில் சொத்தில், 124 வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அந்த வீடுகளுக்கு, கோவில்களுக்கு தொகை செலுத்த முன் வருவோருக்கு, வாடகை வரைமுறை செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X