பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை குடிநீர் கட்டணம் 2 மாதத்தில் ரூ.60 லட்சம் வசூல்

Added : பிப் 13, 2020
Advertisement

ஓமலூர்: ஓமலூரில், இரு மாதத்தில், நிலுவை குடிநீர் கட்டணம், 60 லட்சம் ரூபாயை, பேரூராட்சி வசூலித்துள்ளது.
ஓமலூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 3,475 வீடுகள், 130 கடை, வணிக வளாகங்களுக்கு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2019ல், நான்கு காலாண்டு குடிநீர் கட்டணம் செலுத்தாமல், பலர் நிலுவை வைத்திருந்ததால், பேரூராட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தீவிரமாக வசூல் செய்யும் பணி தொடங்கியது. அத்துடன், கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது. இரு மாதமாக, தீவிரமாக வசூல் செய்யப்பட்டதால், நிலுவையிலிருந்த, 60 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் கூறியதாவது: குடிநீர் கட்டண நடைமுறை விதி குறித்த அறிவிப்பு பலகை, பேரூராட்சி அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் வசூல் செய்யப்படுவதால், உரிய காலத்தில் பணம் கட்டவில்லை எனில், தானாகவே காலாவதியாகிவிடும். நிலுவை தொகையில், 80 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதி தொகை, இம்மாத இறுதிக்குள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X