பொது செய்தி

தமிழ்நாடு

பொது பாதை அடைப்பு: பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: சேலம், சன்னியாசிகுண்டு ஊராட்சி, காட்டுமரக்குட்டையில், நான்கு தலைமுறையாக பயன்படுத்தி வந்த பொதுபாதையை, அப்பகுதியைச்சேர்ந்த சிலர் அடைத்து, சுவர் எழுப்பி விட்டனர். அதனால், போக்குவரத்து தடைபட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாதையை அகற்றகோரி, தொடர்ந்து மன்றாடி வருகின்றனர். நடவடிக்கை இல்லாததை கண்டித்து, நேற்று, நாட்டாண்மை கழக கட்டடம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ்குமார், மாதர் சங்க மாவட்ட செயலர் ஞானசவுந்தரி உள்பட பலர், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X