பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழியில் குரும்பப்பட்டி பூங்கா டிக்கெட்: நடுத்தர அந்தஸ்துக்கு மேம்படுத்தும் பணி தீவிரம்

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா டிக்கெட் இணைய வழியில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுத்தர அந்தஸ்துக்கு, பூங்காவை மேம்படுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சேலம், குரும்பப்பட்டியில், 31.731 ?ஹக்டேரிலுள்ள, வன உயிரியல் பூங்காவில், ஆமை, முதலை, மலைப்பாம்பு, குரங்கு, மயில், வங்கா நரி, வெளிநாட்டு பறவைகள் உள்ளன. செயற்கை நீரூற்று, தத்ரூப விலங்கு பொம்மை, பசுமை புல்வெளி, மான், வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் மட்டுமின்றி, பிரத்யேக குழந்தைகள் பூங்கா, அல்லி, தாமரைக்குளம் தனித்தனியே அமைந்துள்ளன. இவற்றை கண்டுகளிக்க, 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டணமில்லை. சிறியவர்களுக்கு, 10 ரூபாய்; பெரியவர்களுக்கு, 20 ரூபாய் நுழைவு கட்டணம். சிறு வன உயிரியல் பூங்காவாக உள்ள குரும்பப்பட்டி பூங்காவை, நடுத்தர வன உயிரியல் பூங்காவாக மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஆயத்தப்பணியாக, பூங்கா டிக்கெட், இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி, நேற்று தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது: கடந்தாண்டு, 2.77 லட்சமாக இருந்த சுற்றுலாப்பயணியர் எண்ணிக்கை, நடப்பாண்டு, மூன்று லட்சத்தை தாண்டிவிடும். அது. 3.5 லட்சத்தை தாண்டினால், நடுத்தர பூங்காவாக மேம்படுத்தப்படும். அதற்கேற்ப, தற்போதுள்ள, 10 வகை உயிரினங்கள், 35 ஆக அதிகரித்து, எண்ணிக்கை, 150ல் இருந்து, 350 ஆக உயர்த்தப்படும். அரியவகை உயிரினங்கள், மூன்றிலிருந்து, 10 ஆகவும், அதன் எண்ணிக்கை, 10ல் இருந்து, 50 ஆகவும் அதிகரிக்க செய்வோம். சுற்றுலா பயணியர் வசதிக்கு, ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்கிருந்தும், ண்ச்டூஞுட்ஞுஞிணிtணிதணூடிண்ட்.ஞிணிட் என்ற இணையதளத்தில், சேலம், வன உயிரியல் பூங்காவுக்கு, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அது, பதிவேற்றமானதும் வரும் குறுந்தகவலை, நுழைவு பகுதியில் காட்டி, உள்ளே செல்லலாம். டிக்கெட் பெற வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே இணையதளத்தில், பூங்கா குறித்த, அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். விரைவில், ஆணைவாரி முட்டல் ஏரி, ஏற்காடு சூழல் பூங்கா, கரடியூர் வியூ பாயின்ட், காவேரி பீக் நுழைவு டிக்கெட், இணைய வழியில் பெறலாம். தற்போது, நான்கு பேர் பயணிக்கும் பேட்டரி கார் உள்ளது. நாளை(இன்று), எட்டு பேர் பயணிக்கும்படி, பேட்டரி கார், பயன்பாட்டுக்கு வருகிறது. கோவை, குற்றாலம், பரளிக்காடு, ஆணைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில், இணையவழி டிக்கெட் வசதி, மூன்றாண்டாக உள்ளது. ஆனால், வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்கு அடுத்து, இரண்டாவதாக, சேலம் வன உயிரியல் பூங்காவில்தான், இணையவழி டிக்கெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X