பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: சேலம் வழியே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு, இன்று முன்பதிவு தொடங்குகிறது. சென்னை, சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில், பிப்., 14 இரவு, 8:30க்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே, மறுநாள் காலை, 8:45க்கு எர்ணாகுளத்தை அடையும். எர்ணாகுளம் - சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில், பிப்., 16, 23 இரவு, 7:00 மணிக்கு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பி, சேலம் வழியே அடுத்தநாள் காலை, 7:20க்கு, சென்ட்ரலை அடையும். சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில், பிப்., 21, 28, மார்ச், 6, 13, 20, 27 இரவு, 8:30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே மறுநாள் காலை, 8:45க்கு எர்ணாகுளத்தை அடையும். எர்ணாகுளம் - சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், மார்ச், 1, 8, 15, 22, 29 இரவு, 7:00 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து கிளம்பி, சேலம் வழியே அடுத்தநாள் காலை, 7:20க்கு சென்ட்ரலை அடையும். இந்த ரயில்கள் முன்பதிவு, இன்று காலை தொடங்குவதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பால் சில ரயில் தாமதமாக இயக்கப்படும்: வஞ்சிபாளையத்தில், பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், ஈரோடு - திருப்பூர் இடையே, ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் - கோவை, கோவை - பாலக்காடு பயணியர் ரயில்கள், பிப்., 15 முதல், 23 வரை, 65 நிமிடம்; பிலாஸ்பூர் - எர்ணாகுளம் ரயில், பிப்., 18ல், 55 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ஐதராபாத் - கொச்சுவேலி சிறப்பு ரயில், பிப்., 16, 23ல், 25 நிமிடம்; திருச்சி - பாலக்காடு பயணியர் ரயில், பிப்., 15 முதல், 23 வரை, 25 நிமிடம்; ஜெய்ப்பூர் - கோவை அதிவிரைவு ரயில், பிப்., 20ல், 40 நிமிடம்; பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், பிப்., 20ல், 18 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X