பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்புடன் திருவிழா நடத்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு

Added : பிப் 13, 2020
Advertisement

ஓமலூர்: போலீஸ் பாதுகாப்புடன், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் திருவிழாவை நடத்த, அமைதி பேச்சுவார்த்தையில் முடிவானது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம், கைலாச நாதர் கோவிலில் தைப்பூச தேரோட்டம், கடந்த, 8ல் தொடங்கியது. மூன்றாம் நாள், தேரோட்டம் நிறைவில், இரு தரப்பிடையே மோதல் வெடித்து, கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால், கோவில், தேர் நிலை பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேட்டூர் சப் -கலெக்டர் சரவணன் தலைமையில், ஓமலூர் போலீஸ் டி.எஸ்.பி., பாஸ்கரன், தாசில்தார் குமரன் முன்னிலையில், ஓமலூர், தாலுகா அலுவலகத்தில், நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், திருவிழாவில் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும்; எந்த பிரிவினரும் கோவிலை சொந்தம் கொண்டாடக்கூடாது; பிரச்னை குறித்து, சமூக வலைதளங்களில் பரப்பினாலோ, அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலோ, அவர்கள் மீது நடவடிக்கை; அனைவரும் ஒற்றுமையாக திருவிழாவை நடத்த வேண்டும். தகுந்த போலீஸ் பாதுகாப்புடன், தெப்பத்திருவிழா நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.

15ல் தெப்பத்தேர்: மேலும், இன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளல், நாளை, நடராஜர் தரிசனத்தில் வீதியுலா, நாளை மறுநாள் தெப்பத்தேர் விழா, 16ல், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர், கோடிக்காரர், கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X