பொது செய்தி

தமிழ்நாடு

15, 16ல் சித்த மருத்துவ முகாம்

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: வரும், 15, 16ல், சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி நடக்கவுள்ளது. இதுகுறித்து, சேலம் ரோட்டரி சங்கத்தலைவர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், சகாதேவபுரம், ரோட்டரி ஹாலில், பிப்., 15, 16ல், இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி நடக்கவுள்ளது. அத்துடன், பாரம்பரிய உணவு திருவிழா, சிறுதானிய உணவு கண்காட்சி, உணவு கலப்படம் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி தனித்தனியே இடம்பெறும். பிரபல சித்த மருத்துவர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துவர். சித்த மருந்துகள், கட்டணமின்றி வழங்கப்படும். சித்த மருத்துவம் தொடர்பான புத்தகங்கள் கிடைக்கும். காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, முகாம், கண்காட்சி நடக்கும். இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை, உணவு பாதுகாப்பு, மகளிர் திட்டம் இணைந்து, ஏற்பாடுகளை செய்துவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மக்கள் பங்கேற்கலாம். தகவலுக்கு, 94866 - 64353 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X