பொது செய்தி

தமிழ்நாடு

'கொட்டாவி' விடவைக்கும் பயிற்சி: தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் தவிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே வழங்கப்பட்ட அடிப்படை பயிற்சியே மீண்டும், மீண்டும் அளிக்கப்படுவதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு, செய்முறை தேர்வு நிறைவடையும் நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறை தேர்வு பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் குறித்து, இரு நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும், 18 மையங்களில் நடந்து வரும் பயிற்சியில், ஆங்கிலம், கணித ஆசிரியர்களுக்கு, நேற்றுடன் பயிற்சி முடிந்தது. இன்று, நாளை, தமிழ், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கும், 17, 18ல், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது. இதில், ஒன்பது, 10ம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், செய்முறை புற தேர்வர்களாக பணிக்கு சென்றுவிட்டனர். தற்போது பட்டதாரி ஆசிரியர்களும் பயிற்சிக்கு வருவதால், பள்ளியில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வழங்கப்படும் பயிற்சியும் பயனற்றதாக உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தகவல் தொழில்நுட்ப பயிற்சி என, கடந்தாண்டே இரு நாள் பயிற்சியளித்தனர். அதில், 'தீக்ஸா' செயலி செயல்பாடு உள்ளிட்ட கணினி அடிப்படை பயன் குறித்து பாடம் நடத்தினர். இது ஏற்கனவே பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தெரிந்தவை. நடப்பாண்டும், இதே பயிற்சியளிக்கப்படுகிறது. புது ஆசிரியர்களுக்கு உதவும் என்றாலும், ஒரே நாளில் முடித்துவிடலாம். வழங்கப்படும் நிதியை செலவு செய்ய, இரு நாள் இழுத்தடிக்கின்றனர். இதனால், 'கொட்டாவி' விட்டுக்கொண்டு அமர்ந்துள்ளோம். அதுவும், தேர்வு நேரத்தில் நடத்தப்படுவது வேதனை. பயனற்ற பயிற்சியளித்து, ஆசிரியர்களின் நேரத்தை விரயமாக்குவதோடு, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழாக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X