பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராய தீமை: மாணவர்கள் விழிப்புணர்வு

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: மது, கள்ளச் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி எடுத்துரைத்தனர். கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், சேலம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதில் பங்கேற்ற, கல்லூரி மாணவ, மாணவியர், திருவள்ளுவர் சிலை வழியாக சென்று, நேரு கலையரங்கை அடைந்தனர். அங்கு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வென்ற, 65 மாணவ, மாணவியருக்கு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பரத நாட்டியம், நாடகம், சிலம்பாட்டம், பொய்க்கால் நடனம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், மதுவால் ஏற்படும் தீமை குறித்த உரைவீச்சு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பரிசு பெற்றனர். சேலம் மண்டல மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், வன அலுவலர் பெரியசாமி, டி.ஆர்.ஓ., திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X