சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி: 'தில்லாலங்கடி' தந்தை, மகன் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

சேலம்: இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரேவுள்ள, வசந்தம் ஓட்டல் சாலையில், சுப்ரமணி, 58, அவரது மகன் பாலசுப்ரமணி, 35, ஆகியோர், 'ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிதி நிறுவனத்தை தொடங்கினர். இதில், லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், முதல் ஐந்து மாதத்துக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆறு மாதத்துக்கு பின், செலுத்திய லட்சம் ரூபாய் மீண்டும் வழங்கப்படும். லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, ஐந்து மாதம் பணம் பெறாதபட்சத்தில், ஆறாவது மாதத்தில், செலுத்திய பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என, கவர்ச்சி விளம்பரங்களை அறிவித்தனர். அதை நம்பி, சின்ன திருப்பதி, அபிராமி கார்டனைச் சேர்ந்த சிவா, 30, கடந்த, 2019 ஜனவரியில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினார். பணத்தை பெற்ற அவர்கள், தாங்கள் அளித்த உறுதிமொழிப்படி, எந்த பணத்தையும் தர மறுத்துவிட்டனர். சிவா, கடந்த, 1ல், மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலிடம் புகாரளித்தார். இதுகுறித்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரித்து, சுப்ரமணி, பாலசுப்ரமணி, ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா நிதி நிறுவன இணை இயக்குனர் வினோத், 42, மீது, நேற்று முன்தினம், மோசடி வழக்குப்பதிந்தனர். நேற்று, தந்தை, மகனை கைது செய்த போலீசார், தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனர். இவர்கள், சிவா மட்டுமின்றி, சேலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரிடம், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல்படி, தந்தை, மகனிடம், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X