பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : பிப் 13, 2020
Advertisement

சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்: ஈரோடு, பி.எஸ்.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் வரை, சாலையின் இரண்டு புறமும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், சாக்கடை மேலும் சாக்கடையை தாண்டி சாலையையும் ஆக்கிரமித்து கடைகளை பரப்பியுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் வரும் போது வழிவிட முடியாமல் பாதசாரிகள் தட்டுதடுமாறி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நிம்மதியாக செல்ல அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினால் நல்லது.

- ஈ.பி.கிருஷ்ணகுமார், ஈரோடு.

மாட்டு வண்டிகளால் சிரமம்: ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்., வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி, மஜித் வீதி, மணிக்கூண்டு உட்பட பல இடங்களில் மாட்டு வண்டிகளில் லோடுகளை ஏற்றி, இறக்கி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றனர். மாநகர பகுதியில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி என்ற போக்குவரத்து விதி இருந்தும், அதை மதிப்பதில்லை. பிற வாகன ஓட்டிகளிடம் சண்டை இடுவதும் அதிகரிக்கிறது.

- சி.நல்லேந்திரன், ஈரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X