பொது செய்தி

தமிழ்நாடு

லூர்து மாதா தேர் பவனி: ஏராளமானோர் பங்கேற்பு

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: ஈரோடு, புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த, லூர்து மாதா தேர் பவனியில், ஏராளமானோர் பங்கேற்றனர். லூர்து என்ற இடத்தில், 1858ல் அன்னை மாதா, 18 முறை காட்சியளித்தார். இந்த நினைவை போற்றும் வகையிலும், உலக நோயாளிகள் தினத்தையொட்டியும், ஆண்டுதோறும் பிப்.,11ல் லூர்து அன்னை திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் லூர்து மாதா தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. காங்கேயம், குழந்தை மாதா ஆலய பங்குத்தந்தை கிளாடிஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. ஈரோடு வட்டார முதன்மை குரு ஜான்ஸ் சேவியர், பங்குத்தந்தைகள் பெனடிக்ட், அந்தோணிராஜ், லாரன்ஸ் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். தொடர்ந்து லூர்து அன்னை தேர் பவனி தொடங்கியது. இதில், மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், லூர்து அன்னையின் உருவச்சிலை வைக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் தேர்பவனி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X