பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: கோபி நகராட்சிக்கு ரூ.29 ஆயிரம் வருவாய்

Added : பிப் 13, 2020
Advertisement

கோபி: திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கிய, இரண்டரை ஆண்டுகளில், மட்கும் குப்பையை அரைத்து, உரமாக்கி விற்பனை செய்ததில், இதுவரை கோபி நகராட்சிக்கு, 29 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


கடந்த, 2017 செப்., முதல், கோபி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 30 வார்டுகளில், வீடு வாரியாக குப்பையை தரம்பிரித்து துப்புரவு பணியாளர்கள் வாங்கி செல்கின்றனர். தினமும் சேகரமாகும் குப்பையை, அந்தந்த வீடு மற்றும் வார்டுகளில் உரமாக்கப்படுகிறது. தவிர, கரட்டூர் உரக்கிடங்கில், 58.30 லட்சம் ரூபாயிலும், ராமர் எக்ஸ்டென்சன் மயான வளாகத்தில், 60.80 லட்சம் ரூபாயில், நுண் உரம் செயலாக்கம் மையத்தில் குப்பை உரமாக்கும் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கிய இரண்டரை ஆண்டுகளில், மட்கும் குப்பையை அரைத்ததில், 530 டன் உரம் கிடைத்தது. துவக்கத்தில், 150 டன் குப்பை உரத்தை, நகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது. நாளடைவில், குப்பை உரத்துக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு ஏற்பட்டது. இதனால் ஒரு டன் குப்பை உரம், 150 ரூபாய் விலையில் வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இதுவரை, 380 டன் குப்பை உரத்தை தலா, 150 ரூபாயில், 35 விவசாயிகளுக்கு, 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இன்னும் 60 டன் குப்பை உரம் நகராட்சி நிர்வாகம், கிடங்கில் கை இருப்பு வைத்துள்ளது. இதேபோல், மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை, எரிபொருள் உபயோகத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு, நகராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி, அரியலூர் சிமென்ட் தொழிற்சாலைக்கு, 280 டன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 150 டன் அளவுக்கு, மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை, நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குப்பையை தரம் பிரித்ததில் கிடைத்த, டியூப் லைட், பேட்டரி செல் ஆகிய மறுசுழச்சிக்கு உதவாத, 700 கிலோ பொருட்கள், திருப்பூரில் உள்ள மின் கழிவு மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X