பொது செய்தி

தமிழ்நாடு

கனி மார்க்கெட்டில் ஒருவருக்கு ஒரு கடைதான்: மாநகராட்சி கமிஷனர் திட்டவட்டம்

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: ''கனி மார்க்கெட்டில், ஒருவருக்கு ஒரு கடை தான் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் இருந்தால், சீல் வைக்கப்படும்,'' என. மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறினார்.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஈரோடு கனி மார்க்கெட்டில் இருந்த பழைய கடைகளை இடித்து அகற்றி விட்டு, புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. பணி துவங்கியவுடன் கனி மார்க்கெட் தினசரி கடைகளுக்கு, கட்டுமான பணிகள் நடக்காத பகுதியில், தற்காலிக தகர செட் மூலம் தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டி கொடுக்கப்பட்டன. இதில், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை எடுத்துள்ளதை உறுதி செய்த மாநகராட்சி நிர்வாகம், நேற்று முன்தினம் மாநகர பொறியாளர் மதுரம் தலைமையில், ஆய்வு செய்து குடோனாக செயல்பட்ட சில கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து, கனிமார்க்கெட் வியாபாரிகள் நேற்று மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர். அதில் 'ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், கடை பூட்டியிருந்தது என்ற காரணத்துக்காக அவற்றை சீல் வைத்து விட்டனர். சிலர் வியாபாரம் இல்லாத காரணதால், கடையை பூட்டி விட்டு சென்றனர். அவர்கள் அனைவரும், ஒரே ஒரு கடையை மட்டும் தான் ஒதுக்கீட்டில் பெற்றுள்ளனர் என்றனர்.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ஒரே ஒரு கடையை, ஒதுக்கீடு பெற்றவர்களின் கடை சீல் வைக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து பின் திறந்து விடுவர். அதே சமயம், ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை, யாராவது வைத்திருந்தால் சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X