வேலைவாய்ப்பு முகாம் 15ல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு முகாம் 15ல் துவக்கம்

Added : பிப் 13, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டம் மூலம், வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிணுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் காலை, 9:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் வரும், 15ல் பெருந்துறை யூனியன் அலுவலகத்திலும், 19ல் மொடக்குறிச்சி யூனியன் அரச்சலூர் நவரசம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 22ல் சத்தியமங்கலம் தாலுகா காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும், 29ல் கொடுமுடி யூனியன் அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. முகாமில் எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றோர், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., உட்பட பல்வேறு தகுதி கொண்டவர்கள் பயன் பெறலாம். கூடுதல் விபரம் அறிய, 'தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன்குட்டை, பெருந்துறை சாலை, ஈரோடு - 638 011, தொலைபேசி: 0424 2257087, மின்னஞ்சல்: dpiuerod@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X