பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகியை அ.தி.மு.க.,வுக்கு இழுக்க தூண்டில்: வைரல் ஆடியோவால் கோபி தொகுதியில் பரபரப்பு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

கோபி: தி.மு.க., பெண் நிர்வாகியை, அ.தி.மு.க.,வுக்கு இழுக்க, கிளை செயலாளர் தூண்டில் போடும், வைரல் ஆடியோவால், கோபி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, டி.ஜி., புதூரை சேர்ந்தவர் லீலாவதி, 50. இவர் மாவட்ட, தி.மு.க., தொண்டரணி துணை அமைப்பாளர். கொங்கர்பாளையத்தை சேர்ந்த தங்கவேல், 40, குன்னாங்கரடு, அ.தி.மு.க., கிளை செயலாளர். இவர் சத்தியமங்கலம், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமியின் ஆதரவாளர். லீலாவதியும், தங்கவேலும் மொபைல்போனில், 22 நிமிடங்கள் பேசிய உரையாடல், வலைதளங்களில் வைரலாக வலம் வந்துகொண்டுள்ளது.

இருவரின் உரையாடல் முக்கிய பகுதி வருமாறு:


தங்கவேல்: 100 சதவீதம், கள்ளிப்பட்டியில் கருணாநிதி சிலையை திறக்க முடியாது. ஒன்றிய பொறுப்பாளர் சிவபாலனை வளர விடமாட்டாங்க. இப்போது கட்சிக்கு வந்த சிவபாலன், ஒன்றிய பொறுப்பும் வாங்கி, எம்.எல்.ஏ., சீட்டுக்கு பறப்பதாக உங்கள் கட்சி ஆட்களே கூறுகின்றனர். அது தெரியுமா உனக்கு. சிவபாலன் பெயர் கெட்டுப்போச்சு. அவர் தேர்தலில் கைகாசு செலவு செய்யவில்லை. சிவபாலனை ஓரங்கட்டி உட்கார வைக்க போறாங்க பாரு; இதை எழுதி வைச்சுக்கோ. என்ன நடக்க போகுதுனு பாரு. நீயெல்லாம் கம்முனு, அ.தி.மு.க.,வுக்கு வந்து தொலைஞ்சிருக்கலாம். அப்படி வந்திருந்தா, ஏதாவது நீ பதவி வாங்கியிருக்கலாம்


லீலாவதி: இப்பத்தான் உங்கள் தலைவர் கிட்ட பேசுங்களேன். நான் உங்கள் கட்சிக்கு வந்து விடுகிறேன்.


தங்கவேல்: யூனியன் கவுன்சிலர் ஆசீர்வாதத்தை கூட்டி வருகிறயா, முதல்வருக்கு சால்வை போட்டு, ராஜமரியாதையோடு எங்கள் கட்சியில் இருவரும் சேருங்கள். நன்றாக யோசனை செய்து பார். அப்புறம் பார், உனக்கு என்ன செல்வாக்குனு. கடந்த தேர்தலில் கூட, கவுன்சிலருக்கு மூன்று லட்சம், தலைவர் பதவிக்கு, இரண்டு லட்சம், வார்டு செயலாளருக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. இத்தனை வருஷமா கட்சியில் இருந்த உனக்கு, என்ன கிடைத்தது.


லீலாவதி: உன் மூலம் எனக்கு ஒரு நல்ல நேரம் வரும்போல் இருக்கிறது.


தங்கவேல்: நீ, அ.தி.மு.க., பக்கம் வந்தால், உறுதியாக உனக்கு நல்ல நேரம்.


லீலாவதி: அந்தியூர் தொகுதியில் என்னை எம்.எல்.ஏ.,வாக பண்ணி விட்டிருங்க. நான் யோசனை செய்து சொல்கிறேன். இவ்வாறு உரையாடல் முடிந்தது.

இதுகுறித்து, தங்கவேலிடம் கேட்டபோது, ''அந்தம்மா தான் போன் செய்து பேசியது. எதார்த்தமாக நான் பேசியதை, பதிவு செய்து வெளியிட்டுள்ளது,'' என்றார். இதுகுறித்து, லீலாவதி கூறுகையில், ''யூனியன் தேர்தலில், தி.மு.க.,வினர் ஏழு பேர் வெற்றி பெற்றும், சேர்மன் பதவியேற்க, அ.தி.மு.க.,வினர் விடமாட்டீங்கிறாங்க,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X