பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலை வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னிமலை: கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி ஈஷா யோகா மையம் சார்பில், 112 அடி ஆதியோகி சிலை நிறுவப்பட்டது. வரும், 21ல் ஆதியோகி முன்பு நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் விதமாக, தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களுக்கும் ஆதியோகி ரதம் சென்று வருகிறது. சென்னிமலை முருகன் கோவிலில், மகாதரிசனமான நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை வந்து முருகனை தரிசித்தனர். அப்போது அங்கு வந்த, ஆதியோகி சிவன் ரதம் வடக்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். நேற்று மாலை 5:30 மணிக்கு வந்த ஆதியோகி ரதம் நள்ளிரவு, 1:30 மணி வரை பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X