சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு எருமை மாடுகள் மீட்பு: இருவர் கைது

Added : பிப் 13, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60, விவசாயி. இவர் கடந்த, 6ல், தொண்டுப்பட்டியில் எருமை மாடுகளை கட்டி விட்டு, வீட்டிற்கு வந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, இரு எருமை மாடுகள் காணவில்லை. இந்நிலையில், கணபதிபாளையத்தில் நேற்று முன்தினம் டீக்கடை ஒன்றில் சுப்பிரமணி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனத்தில், எருமை மாடுகள் இருந்ததை பார்த்து, ஓட்டுனர் பாலனிடம் விசாரித்தார். பின்னர் அவரை, மலையம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், எருமை மாட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர் விசாரணையில் ஈரோடு, மூலப்பாளையம் அருகே வாய்க்கால்மேடு, ஈ.பி.நகர் பகுதியை சேர்ந்த பாலன், 48, கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தை சேர்ந்த பாலன் என்ற பாலகிருஷ்ணன், 54, வாகன ஓட்டுனர் ஆகியோரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, எருமை மாடுகள் இரண்டையும் மீட்டு, டாடா ஏஸ் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X