சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்.,தலைவர் கொலை வழக்கில் சத்தி தலைமை காவலர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

அந்தியூர்: பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில், தலைமை காவலர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன், சங்கராபாளையம் பஞ்., தலைவர் சின்னதங்கம், 49, இவர் கடந்த, 3ல், பட்டப்பகலில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். காரில் தப்பிய சரவணன், பாலமுருகன், ராஜேஷ் ஆகியோரை கவுந்தப்பாடி அருகே போலீசார் பிடித்தனர். இதில் தப்பியோடிய சிவா, முத்துமாரி ஆகியோர் ஆப்பக்கூடல் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கரபாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரின் தந்தையின் கொலைக்கு, பழிக்கு பழி வாங்குவதற்காக சின்னதங்கத்தை கொன்றதாகவும், இதற்கு அரவிந்த், 26, ஏவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த, 6ல், கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரவிந்த் கடந்த சரணடைந்தார். இந்நிலையில், கூலிப்படையினர் சொன்ன தகவல்படி, கொலையில் தொடர்புடைய அரவிந்த் மாமாவான, சங்கர பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சென்னிமலையில் இருந்த அவரை, போலீசார் கைது செய்து நேற்று, பவானி ஜே.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X