சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் குறித்து அவதூறு: போலீஸ் சஸ்பெண்ட்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

ஈரோடு: கோபி போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை போலீசாக பணியாற்றுபவர் சுப்பிரமணியம், 26. இவர், ஈரோடு டவுன் போலீசில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் குறித்து, முகநூலில் சில பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். பதிவுகளை நீக்க அறிவுறுத்தியும், சுப்பிரமணியம் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசனிடம் பெண் போலீஸ் புகாரளித்தார். ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இது குறித்து விசாரித்தார். பெண் போலீசும், சுப்பிரமணியமும் ஆயுதப்படையில் பணிபுரிந்தபோது, ஏற்பட்ட பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில், பழிவாங்கும் நோக்கில் தனது முகநூலில் பெண் போலீஸ் குறித்து, சுப்பிரமணியம் பதிவிட்டது தெரியவந்தது. விசாரணை அறிக்கை ஈரோடு எஸ்.பி.,யிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இரண்டாம் நிலை போலீஸ் சுப்பிரமணியத்தை, தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். மேலும், வழக்குப்பதிவு செய்ய ஈரோடு டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X