சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோஷம் கழிப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: தோஷம் கழிப்பதாக கூறி, 6,000 ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றியவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, சூரம்பட்டிவலசு அணைகட்டு ரோடு நான்காவது வீதியை சேர்ந்தவர் யோகநாதன், 53. கட்டட தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திலகவதியிடம், மகளுக்கு தோஷம் கழிப்பதாக கூறி, பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் முகமது ரபிக், 32, நேற்று காலை யோகநாதன் வீட்டுக்கு சென்றார். அங்கு தான் வைத்திருந்த ரசாயனம் கலந்த விபூதியை, திலகவதி மற்றும் அவரது மகளிடம் கொடுத்து தண்ணீரை அதில் ஊற்ற செய்தார். அப்போது, விபூதி சிவப்பு நிறமாக மாறியது. உங்கள் மகளுக்கு இருந்த தோஷம் தற்போது கழிந்து விட்டது எனக்கூறி, 6,000 ரூபாய் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்டார். அப்போது வீட்டுக்கு வந்த யோகநாதன், இது குறித்து தன் மனைவியிடம் கேட்டார். தோஷம் கழிப்பதாக வந்த நபரை, தன் மகன் நவீன்குமாருடன் பிடித்து சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் தோஷம் கழிப்பதாக கூறி, 12 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியதும், இறுதியில், 6,000 ரூபாய் மட்டும் பெற்று கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X