சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் கைதான மூவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் நாகராஜ், 22, வேன் டிரைவர். திருமணமாகாதவர். இவர் கே.ஏ.எஸ். நகர் வாய்க்கால் கரையை ஒட்டிய விவசாய நிலத்தில், கடந்த, 26ல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முன் விரோதம் காரணமாக கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது. கொலை தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மூவர் தலைமறைவாக உள்ளனர். கைதான அனைவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக கருங்கல்பாளையம் போலீசார், நேற்று முன்தினம் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் நித்யானந்தம் மகன் பிரவீன் குமார், 22, கருங்கல்பாளையம் ரங்கநாதன் வீதி அப்துல் ஜலீல் மகன் முகமது பாரூக் அலி, 37, ஈரோடு கோட்டையார் வீதி பெரியசாமி மகன் மணிகண்டன், 29, ஆகிய மூவரையும் நீதிமன்ற அனுமதியுடன் கோவை மத்திய சிறையில் இருந்து காவலில் எடுத்து வந்தனர். இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்தது. இதன்படி, போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை விசாரணை முடிந்தது. இதையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X