பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், மூன்று இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஈரோடு, மூலப்பட்டறையில் உள்ளது ஆண்டவர் லேத் ஒர்க்ஸ். ஆயில் மில் மிஷினரி தயாரிப்பாளர்களான, ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சண்முகம் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மூலப்பட்டறையில் மட்டுமின்றி அசோகபுரம், சோலாரிலும் லேத் ஒர்க்ஸ் உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 10:35 மணியளவில், ஒரே நேரத்தில் மூன்று இடங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக, சோதனை நடத்தப்பட்டது. ஈரோடு மூலப்பட்டறைக்கு, ஆறு வருமான வரித்துறை அதிகாரிகளை கொண்ட குழு சென்றது. மூன்று இடங்களிலும் மொத்தம், 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு, பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடத்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X