தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு 'மாஸ்க்': சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடிப்பு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சத்தியமங்கலம் இன்ஜினியர் கண்டுபிடித்த மாஸ்க்குக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திருநகர் காலனியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் விக்னேஷ், 24; மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், இரண்டு ஆண்டாக, கோவையில் தனியார் கார்பன் பேப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார். கார்பன் பேப்பர் தயாரிப்பில் ஆர்வம் அதிகமாகவே, பணியில் இருந்து நின்றார். இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தார். இந்நிலையில் சீனாவில்,'கொரோனா' வைரஸ் தாக்குதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, 'மாஸ்க்' அணியும்படி சீன அரசு அறிவித்தது. இதனால் சீனாவில், 'மாஸ்க்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விக்னேஷ் கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை வைத்து, 'மாஸ்க்' கண்டுபிடித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சாதாரண மாஸ்க்குகளில், 400 நானோ மைக்ரான் அளவுள்ள துகள் ஊடுருவும். கொரோனா வைரஸ், 120 நானோ மைக்ரான் அளவுள்ளது. இதனால் மனிதர்கள் சுவாசிக்கும்போது, நோய் தொற்றிக்கொள்ளும். தற்போது சீனா பயன்படுத்தும் மாஸ்க், 300 நானோ மைக்ரான் அளவு மட்டுமே இருப்பதால், 80 சதவீத நோய் தொற்றை தடுக்க முடியும். நான் கண்டுபிடித்துள்ள மாஸ்க்கில், கிராபெனினை பொடியாக்கி தடவலாம். அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது ஒட்டவைத்து பயன்படுத்தலாம். கிராபெனின் மூலம், 0.142 நானோ மைக்ரான் மட்டுமே செல்லும் என்பதால், நோய் தொற்றில் இருந்து, 95 சதவீதம் காத்துக் கொள்ள முடியும். இந்த கண்டுபிடிப்பை, 'ரிசர்ச் கேட்' இணையதளத்தில் பதிவிட்டேன். இதை பார்த்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில், இந்த மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம், 95 சதவீதம் 'கொரோனா' வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்து கொள்ள முடியும் என உறுதிப் படுத்தினர். சீன அரசுக்கும் பரிந்துரைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். என் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது, சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X