சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டியவருக்கு டூவீலரில் சீட் பெல்ட் அணியாததாக அபராதம்

Added : பிப் 13, 2020
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், டூவீலருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என, இ சலான் கருவி மூலம், 1,200 ரூபாய் அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகரில் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., விஜயகுமார் நேற்று முன்தினம் காலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது, ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்த முருகேசன் மகன் சரவணக்குமார், 27, ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வந்தார். அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியது, சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தது, முறையான சீருடை இல்லாமல் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட விதிமுறைகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து இ சலான் கருவி மூலம், 1,200 ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால், இந்த அபராத தொகையை சரவணக்குமார் செலுத்த மறுத்து சென்று விட்டார். இதையடுத்து எஸ்.ஐ., விஜயகுமார், ஆம்புலன்ஸ் வாகன பதிவெண்ணை பதிவு செய்வதற்கு பதில், தவறுதலாக திருச்சி மாவட்டம், ராஜிவ் காந்திநகரை சேர்ந்த சுப்பையாவுக்கு சொந்தமான ஸ்கூட்டர் பதிவு எண்ணை பதிவு செய்துள்ளார். இதன்படி, டூவீலருக்கு சீட் பெல்ட் போடாதது, சீருடை அணியாதது, ஒலி மாசு ஏற்படுத்தியதாக எஸ்.ஐ., வழக்குப் பதிவு செய்து, 1,200 ரூபாய் அபராதம் விதித்தது தெரியவந்துள்ளது. அபராத தொகையை செலுத்த போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X