சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.14.25 லட்சம் மோசடி: தம்பதி கைது

Added : பிப் 13, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தேனிமலையை சேர்ந்தவர் மணிமேகலை, 35; திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டை சேர்ந்தவர் ஜெயந்தி, 35; இருவரும் நண்பர்கள். ஜெயந்தியின் கணவர் பவுன்குமார், 40, ஷேர் மார்க்கெட் டீலர்ஷிப் நடத்தி வந்தார். இவர், தனது மனைவி ஜெயந்தியுடன் சென்று, மணிமேகலை மற்றும் அவரது கணவர் வேலுவிடம், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறினார். இதை நம்பிய மணிமேகலை, கடந்த, 2015 ஆக., 17ல், 1 லட்சம் ரூபாயை, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார். இதையடுத்து, 1 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாயை, மணிமேகலைக்கு பவுன்குமார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர், மணிமேகலை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய கேட்டார். இதனால், மணிமேகலை, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து, 14 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாயை, ஜெயந்தியிடம் கொடுத்தனர். இதை பெற்ற ஜெயந்தி, அவரது கணவருடன் சேர்ந்து, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து, மணிமேகலை, திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயந்தி மற்றும் பவுன்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X