மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை முயற்சி

Added : பிப் 13, 2020
Share
தர்மபுரி: விவசாய உயர் மின் கோபுரம் அமைத்தற்கான உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து, உயர் மின்கோபுரத்தில் ஏறி, விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.இண்டூர் அடுத்த கோரப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி, 40. இவருக்கு, இப்பகுதியில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிக்காக கையகப்படுத்த நிலத்துக்கு

தர்மபுரி: விவசாய உயர் மின் கோபுரம் அமைத்தற்கான உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து, உயர் மின்கோபுரத்தில் ஏறி, விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
இண்டூர் அடுத்த கோரப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி, 40. இவருக்கு, இப்பகுதியில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிக்காக கையகப்படுத்த நிலத்துக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, சின்னசாமி, அதிகாரிகளிடம் முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த சின்னசாமி நேற்று காலை, 11:00 மணிக்கு, தனது நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். தகவலின்படி, இண்டூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் சென்றனர். பின், நிலம் மற்றும் பயிர், மரங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, சின்னசாமி உயர்மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X