பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 13, 2020
Advertisement

தரைப்பாலத்துக்கு தடுப்பு இல்லை: சூளகிரி - கும்பளம் சாலையில், சூளகிரி அருகே தரைப்பாலம் உள்ளது. இதன் இரண்டு பக்கத்திலும் உள்ள தடுப்புகள் அனைத்தும் உடைந்துள்ளன. இவை குறுகிய சாலையாக உள்ளதால், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகனங்கள் தவறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இரவில் வரும், வாகன ஓட்டிகள் பாதை தெரியாமல், பள்ளத்தில் விழுகின்றனர். இந்த தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
கட்டடம் திறக்க தயக்கம் ஏன்? ஓசூர் அலசநத்தம் - பேரிகை சாலையில் உள்ள பூதிநத்தம் அருகே, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, குளிர்பதன கிடங்கு மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்ய யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் இன்னும் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், விவசாய குழுக்களுக்கு பயன்படவில்லை. மாவட்ட நிர்வாகமும், அரசும் தயக்கம் காட்டாமல், கட்டடத்தை திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X