பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அருங்காட்சியகத்துக்கு பள்ளி மாணவியர் களப்பயணம்

Added : பிப் 13, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அரசு, மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஒரு நாள் களப்பயணமாக, அரசு அருங்காட்சியகம் சென்றனர்.
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர், 300 பேர், வரலாற்று ஆசிரியர் ரவி தலைமையில், ஒரு நாள் களப்பயணமாக, அரசு அருங்காட்சியகத்துக்கு சென்றனர். அங்கு, காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், 18ம் நூற்றாண்டு பீரங்கிகள், கற்சிலைகள், பண்டையகால உடைகள், கல் ஆயுதங்கள், ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் குறித்து மாணவியருக்கு, வரலாற்று ஆசிரியர் விளக்கினார். மேலும், கோவில் சிற்பங்கள், மருத்துவ மூலிகைகள், ஓலைச்சுவடிகள், விலங்குகளின் உடல் உறுப்புகள், தபால்தலைகள், படைக்கால மட்கலன், சுடுமண் பொம்மைகள் குறித்து மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து மாணவியரிடம் கேட்டபோது, 'புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதைவிட நேரில் சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புத்தகங்களில் இல்லாத வரலாற்று நிகழ்வுகளை நேரில் பார்த்து கேட்டறிந்தது, மிகவும் ஆச்சரியமாக இருந்தது' என்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X