மலை கிராம அரசு பள்ளிகளில் டார்வின் பிறந்த நாள் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலை கிராம அரசு பள்ளிகளில் டார்வின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Added : பிப் 13, 2020
Share

ஓசூர்: தளி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், சித்தாண்டபுரம், ஏ.புதூர், சீங்கோட்டை, கெம்பக்கரை, பிலிகுண்டுலு ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், அறிவியலாளர் மற்றும் பரிணாம கொள்கையின், தந்தை டார்வின் பிறந்த நாள் விழா தனித்தனியாக கொண்டாடப்பட்டது. இதில், ஐந்து முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, டார்வின் வாழ்க்கை வரலாறு, பரிணாம கொள்கை குறித்து, குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. மேலும், சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் மற்றும் முகமூடி வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் சுரேஷ்குமார், தவமணி, ராஜ்குமார், லாரன்ஸ், ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X