பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் 2வது நாளாக யோகா, தியான முகாம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் நேற்று, இரண்டாவது நாளாக யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் நடந்தது. ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி, நேற்று முன்தினம், இலவச யோகா சிகிச்சை மற்றும் தியான பயிற்சி முகாம் துவங்கியது. நாளை (பிப்.,14) வரை முகாம் நடக்கிறது. பிரபல யோகா நிபுணர் பாபா ராம்தேவ், யோகா மற்றும் தியான முகாமை நேற்று

ஓசூர்: ஓசூரில் நேற்று, இரண்டாவது நாளாக யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் நடந்தது. ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி, நேற்று முன்தினம், இலவச யோகா சிகிச்சை மற்றும் தியான பயிற்சி முகாம் துவங்கியது. நாளை (பிப்.,14) வரை முகாம் நடக்கிறது. பிரபல யோகா நிபுணர் பாபா ராம்தேவ், யோகா மற்றும் தியான முகாமை நேற்று முன்தினம் அதிகாலை துவக்கி வைத்து, உடல், மனம், ஆரோக்கிய மேம்பாடுகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார். முகாமின் இரண்டாம் நாளான நேற்று, அதிகாலையில், 500க்கும் மேற்பட்டோருக்கு, பாபா ராம்தேவ் யோகா மற்றும் தியான பயிற்சி அளித்தார். பல்வேறு விதமான யோகா மற்றும் தியான பயிற்சியை அவர் செய்து காண்பிக்க, அதை பின்தொடர்ந்து மக்களும் செய்தனர். பயிற்சி முகாமில், முன்னாள் எம்.பி., நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X