பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் அடிப்படை தேவை குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் விவாதம்

Added : பிப் 13, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து, முதல் முறையாக நேற்று காலை ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பி.டி.ஓ., உமாமகேஸ்வரி, சிறப்பு திட்ட பி.டி.ஓ., சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர், ஓட்டளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை மேம்பாடு, தெருவிளக்கு போன்ற பணிகள், பகுதி வாரியான தேவைகள் குறித்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மன்ற விவாதம் மேற்கொண்டனர். தேவைப்படும் பணிகள் அனைத்தும், நிதிநிலையை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும், ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக்குழு துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், துணை பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X