சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை அடித்து கொன்றவருக்கு ஆயுள்

Added : பிப் 13, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, நிலப்பிரச்னையில் விவசாயியை கொன்றவருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓசூர் அடுத்த சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணா, 62. விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், 39, என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது; கடந்த, 2016 பிப்., 24ல், மனைவி நாகம்மாவுடன், சானமாவு கிராமம் அருகே சின்னண்ணா பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த பிரகாஷ், கட்டையால் தலையில் தாக்கி, அவரது மனைவி நாகம்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த சின்னண்ணா, சம்பவ இடத்திலேயே பலியானார். வழக்குப்பதிவு செய்த உத்தனப்பள்ளி போலீசார், பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு, ஓசூர், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அசோகன், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷிற்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், ஆறு மாத சிறை தண்டனையும், கொலையான சின்னண்ணாவின் மனைவி நாகம்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் ஆஜராகி வாதாடினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X