சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரை மறித்து தொழிலதிபரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் தலைமறைவு

Added : பிப் 13, 2020
Share
Advertisement

ஓசூர்: ஒகேனக்கல்லுக்கு, சுற்றுலா சென்ற தொழிலதிபரின் காரை மறித்து, 10 ஆயிரம் ரூபாய் பறித்த, லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான போலீஸ்காரரை தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே, கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் மதுராஜ்ரெட்டி, 55, தொழிலதிபர்; இவர், கடந்த மாதம், 28ல், தனது நண்பர்களுடன், ஹூண்டாய் வெர்னா காரில், ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். குந்துக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடியை கடந்து, மேடுப்பள்ளம் வனப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது, அப்போது, ஸ்டார் சிட்டி பைக்கில் வந்த இருவர், காரை வழிமறித்துள்ளனர். அதில், காக்கி நிற பேண்ட் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்தவர், தன்னை போலீஸ் என்றும், வாகன தணிக்கைக்காக, கார் ஆவணங்களையும் கேட்டுள்ளார். அப்போது, மதுராஜ்ரெட்டியிடமிருந்த, 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இது குறித்து, அஞ்செட்டி போலீசில் நேற்று, மதுராஜ் ரெட்டி புகார் செய்தார். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றும், பென்னாகரம் அடுத்த போடூரை சேர்ந்த பாரதிமோகன், 27, மற்றும், தடாங்கம் அருகே கக்கஞ்சிபுரத்தை சேர்ந்த, அவரது நண்பரான லாரி ஓட்டுனர் கார்த்திகேயன், 48, என தெரிந்தது. இருவர் மீதும், அச்சுறுத்தி வழிப்பறித்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்த அஞ்செட்டி போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாரதி மோகனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X