சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனத்தில் இருந்து விழுந்த மாணவர் சாவு

Added : பிப் 13, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பூதிநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரகு மகன் திலிப், 12. திம்மசந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, சரக்கு வாகனத்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஓசூர் - பேரிகை சாலையில் உள்ள பூதிநத்தம் பஸ் நிறுத்தம் அருகே, சரக்கு வாகனம் வரும்போது, கீழே இறங்க திலிப் முயன்றார். ஆனால், சரக்கு வாகனம் நிற்காததால், தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X