சிஏஏ, என்ஆர்சி.,க்கு வங்கி மூலம் கணக்கெடுப்பு: எச்சரிக்கும் மம்தா

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (17)
Advertisement
MamataBanerjee, WestBengal, CAA, NRC, Mamata, CM, மம்தாபானர்ஜி, மேற்குவங்கம், சிஏஏ, என்ஆர்சி, மம்தா, முதல்வர்

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலம் கணக்கெடுப்பு நடப்பதாகவும், அதற்காக யாரும் தகவல்களை அளிக்க வேண்டாம் எனவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.




சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் உள்ளிட்டவற்றை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் எனக்கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, இதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். மத்திய அரசு சார்பில் சிஏஏ, என்ஆர்சி.,க்காக உங்களின் ஆவணங்களை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் எனவும் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், மத்திய அரசு மறைமுகமாக கணக்கெடுப்பு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.




இது தொடர்பாக மம்தா கூறியதாவது: பாஜ.,வின் பெயரை சொல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து கணக்கெடுப்பு நடத்துகின்றன. அரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்புகளுக்கு யாரும் தங்களின் விபரங்களை அளிக்க வேண்டாம். தற்போது, டிவி செய்தியில் பார்த்தபோது ஹப்ராவில் உள்ள நகைக்கடையில் பாஜ.,வை சேர்ந்த 15 பேர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும் என கூறுகின்றனர்.

அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?. அப்படி கேட்பவர்களை விரட்டுங்கள். அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து வருவதாக கூறினால் நம்பாதீர்கள். இவ்வாறு மம்தா கூறினார். இதற்கிடையே நகைக்கடையில் ஆவணங்களை கேட்டவர்கள் மீது ஹப்ரா போலீஸ் ஸ்டேசனில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
13-பிப்-202021:23:41 IST Report Abuse
Aarkay அந்நிய நாட்டு கைக்கூலிகள் பதரத்தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
13-பிப்-202018:18:19 IST Report Abuse
GMM 1947 க்கு பின் குடிமக்கள் பிறப்பு, பிறந்த நாள், பெற்றோர்கள் விவரம், குடும்ப உறுப்பினர்கள், இருப்பிடம், இறப்பு வரை உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்க வேண்டும். கால தாமதமாக பதிய வழி உண்டு. இந்த பதிவு உண்மை சான்று. தவறு இருப்பின் அதிகாரியை தண்டிக்கலாம். மாநில, மத்திய அரசுகள் இங்கு இருந்து தான் பெற வேண்டும். CAA, NRC க்கு நேரிடையாக தகவல் சேகரிப்பது தவறு. ஆதாரில் தவறை மிஷின் காட்டிவிடும். மக்கள் இருப்பிடம் மாறுவர். ஒப்பிடுவது கடினம். மத்திய அரசு உள்ளாட்சிகளிடம் பிறப்பு விவரம் கேட்கலாம். பதில் சரியில்லை என்றால் நிர்வாக, சட்டபூர்வ நடவடிக்கை துணிந்து எடுக்கலாம். மம்தா வேலையின் ஆயுள் 5 ஆண்டுகள். (மம்தா சட்ட உத்தரவை ஊராட்சிகள் ஏற்க மறுத்தால் என்ன செய்வது?) தும்பை(ஊராட்சி) விட்டு வாலை (மம்தா) ஏன் பிடிக்க வேண்டும். ?
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
13-பிப்-202018:15:01 IST Report Abuse
Ab Cd இனி ஆவணங்கள் திரட்ட ஒவ்வொரு வீடாக ரைட் நடத்துவார்களோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X