குற்றப்பின்னணி வேட்பாளர்கள்: கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (26)
Advertisement
Candidate, Criminal, History, SocialMedia, SupremeCourt, குற்றப்பின்னணி, வேட்பாளர்கள்,  உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

பா.ஜ., முக்கிய நிர்வாகியும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா மற்றும் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கடந்த 4 பொதுத்தேர்தலில் அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவது அபாயகரமானது. குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அவர்களின் விவரத்தை 48 மணிநேரத்தில் கட்சி இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மற்றும் பிராந்திய நாளேடுகளில் வெளியிட வேண்டும். இந்த விவரங்களை, 72 மணி நேரத்திற்குளும் அரசியல் கட்சிகளும், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.




குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளராக தேர்வு செய்தது குறித்தும், வெற்றி வாய்ப்பை தாண்டி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்தும் அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் விவரங்களை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம், கோர்ட்டில் முறைப்படி தெரிவிக்க வேண்டும். கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். உத்தரவை 2018 ல் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் செயல்படுத்தவில்லை.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
13-பிப்-202022:50:43 IST Report Abuse
adalarasan பொது மக்கள் இதையும், பலர், அரசாங்க வீடுகளை டெல்லியில்,காலி செய்ய கொடுத்த கட்டளைகளையும், வரவேற்கிறோம்ஆனால் இதுவரை எந்த அரசும், இதுவரை ஒரு நடவடிக்கையும், எடுக்கவில்லை? இப்பொழுது….?
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
13-பிப்-202022:31:42 IST Report Abuse
Krishna Since V.Long, Courts have Lost Supreme People’s Confidence for NEUTRAL-UNBIASED JUSTICE By their Extreme Bias With Complainants-Police & Officials-Media-Rulers, Just for their Vested Interests (Pay & Promotions, Power, Strength Increase, Advocates Livelihood etc). Hence, ABOLISH ALL COURTS (with all Incumbents without Any Benefits) NOT PUNISHING FALSE COMPLAINANTS, MAL-PROPAGATING MEDIA, POWER MISUSING OFFICIALS (incl. Case-Cooking Police) & RULERS (also Dead Slow, Poor Quality, V.Costly, Non-Simple Procedured, Never Encouraging Litigants to fight themselves). 95% COURTS WILL VANISH But NEW COURTS from Non-Advocates with good Post-ion Training in Law. Though Possible, Elected Reps Wont Do (Anti-People) for Selfishly Extracting Benefits from All Officials (incl. Police & Judges). Higher Judiciary (Parliamentary Justice Committee for SC Judges) Can Punish All Erring Judges in Auto-Appeals (But will Not Do). TO SOLVE BURNING PROBLEMS, Simply FIGHT FOR EVERY YEAR ELECTIONS (Non-Costly)-Elected Reps wont Forget Supreme People, Compel VVV Fattened Officials to Work Properly for People & Will Not Have Time to Loot. Broadbased PEOPLE'S REP COMMITTEES headed by Loksabha MPs (atleast 50% from All-Erstwhile Oppositions-MP, MLAs-Ward Counsillors) MUST ADMINISTER ALL ASPECTS OF PEOPLE’S LIFE (Incl. Justice). Otherwise Only GOD Can SAVE the Countries & World.
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
13-பிப்-202020:34:09 IST Report Abuse
Balasubramanian எல்லா கட்சிகளின் வண்டவாளம் இன்னும் 48 மணி நேரத்தில் தெரியும். உச்சநீதிமன்றத்தில் 72 மணி நேரத்தில், தங்கள் தங்கள் கட்சி சமூக வலை தளங்களில், குற்றவாளிகளின் பின்னணியை குறித்து தகவல் வெளியிட்டதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை எனில் எலக்சன் கமிஷன் கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X