கர்நாடகாவில் 'பந்த்:தமிழர் பகுதியில் பலத்த பாதுகாப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நாகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:latest tamil news


'கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இதுவரை தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை.


latest tamil news


சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்த கோரி, கடந்த நுாறு நாட்களாக பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.இருந்தும் எங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்க, இன்று (13ம் தேதி) கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த முழு அடைப்புக்கு, 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இந்த பந்த் காரணமாக கர்நாடகாவில் ஒரு சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடக்கவுள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கன்னடர்களின் வேலைவாய்ப்பை தமிழர்கள் பறித்துக்கொள்வதாக சில கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இதனால், தமிழர்கள் வாழும் பகுதிகளிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
13-பிப்-202022:16:50 IST Report Abuse
Krishna They Must Fight More So that They Will Lose More (they Neither Work.Nor Intelligent). Fools Dont Realise that Telugus Have Infiltrated More in Karnataka (Kannada Language is More Nearer-Related to Sanskritised Old Tamil than to Telugu (excepting & few cultural practices. In Case of More Problems, Merge Madras-Bombay-Hyderabad Presidency Areas With Tamilnadu, Maharashtra & Telengana Respectiviely- Except Erstwhile Mysore-Karnataka State (whose Kings were actually Tamil Origin Rulers),
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
13-பிப்-202018:59:56 IST Report Abuse
Tamil கன்னடன் வேலை வாய்ப்பை பறித்தவன் ஆந்திரா தெலுங்கன். தெலுங்கன் கன்னடன் போல சிவப்பு மஞ்சள் கொடியுடன் முகநூலில் போஸ் கொடுத்தவுடன் கன்னட வரிகளில் எழுதினால் இந்த கன்னடன் என்று நினைத்துவிடுகிறார்கள். கன்னடன் போல காட்டி கொள்ளும் தெலுங்கன் கன்னட தமிழர்களுக்கு இடையில் சண்டை மூட்டி விடுகிறான். தமீழநாட்டிலும் தெலுங்கன் தமிழர்கள் போல காட்டி கொண்டு தமிழகத்தில் இருக்கும் கன்னடர்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டு தமிழகத்திலும் கர்நாடகாவிலும் சண்டை தூண்டிவிட்டு நடுவில் குளிர்காய்ந்து கொண்டு வசதியாக வாழ்கிறான். தமிழக மற்றும் கன்னட சண்டையை தூண்டி விட்ட தெலுங்கனை இரண்டுபக்கமும் விட்டுவிட்டு இவர்களுக்குள் அடித்து கொண்டுஇருக்கிறார்கள் முட்டாள்கள். 10 ஆம் வகுப்பு TC கர்நாடகாவிலும் சரி தமிழகத்திலும் சரி எடுத்து பார்த்தால் எவ்வளவு தெலுங்கர்கள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அரசியல் காவல்துறை என்று பல முக்கிய பதவிகளில் உட்கார்ந்துகொண்டு ஆந்திரா கும்பலை தமிழக மற்றும் கர்நாடகாவில் நுழைத்து உள்ளனர் என்ற உண்மை இன்றும் இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை. கஷ்டப்படும் தெலுங்கர்கள் பல நல்லவர்ககும் உள்ளனர் ஆனால் இந்த சண்டை மூட்டி விடும் கோல்டிகளை மகாராஷ்டிரா கர்நாடக தமிழ்நாடு விரட்டினால் மட்டுமே அந்த மாநிலம் உருப்படும்
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
14-பிப்-202017:10:52 IST Report Abuse
Jaya Ramஇதுதான் உண்மை...
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
13-பிப்-202018:38:28 IST Report Abuse
mindum vasantham இதை செய்வது காங்கிரஸ் , இந்தியர்களை மொழி வாரியாக பிரித்து அடிக்க விடுவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X