கண்ணான கண்ணே!: வி.ஆர்., மூலம் இறந்த மகளை பார்த்து பரவசப்பட்ட தாய்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (9)
Advertisement
SouthKorea, MeetingYou, VR, Mother, Visit, DiedDaughter, VirtualReality, தென்கொரியா, விஆர், விர்சுவல்_ரியாலிட்டி, தாய்_மகள், பாசம், நிகழ்ச்சி

சியோல்: கொரியாவில் டிவி நிகழ்ச்சியில், விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தன் மகளை தாய் சந்திக்கும் காட்சி, அனைவரையும் கலங்கடித்துள்ளது.

வி.ஆர்., எனப்படும் விர்சுவல் ரியாலிட்டி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனை காட்சிகளை நேரடியாக பார்க்கும் தொழில்நுட்பம். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சம். இந்நிலையில், தென்கொரியாவில் 'மீட்டிங் யூ' என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016ல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன் பற்றி கவலையடைந்து பேசினார். அவரிடம் வி.ஆர்., மூலமாக மகளை சந்திக்க வைக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, சிறப்பு கையுறை அணிந்து, விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் நுழைந்து, மகளுடன் ஜாங் பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜாங், தனது மகளை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். இருவருக்குமான உரையாடல் நீண்டுக்கொண்டே போகிறது. இறந்த மகளை கண் முன்னே பார்ப்பதாக உணர்ந்த ஜாங், உணர்ச்சி மிகுதியில் பாசத்துடன் பேசி அனைவரையும் கலக்கம் அடைய செய்துள்ளது.

வீடியோ லிங்க்:

https://youtu.be/uflTK8c4w0c

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
13-பிப்-202022:57:37 IST Report Abuse
Vena Suna ஐயோ பாவம்...ஆண்டாண்டு வீழ்ந்து புரண்டு அழுதாலும் மாண்டார் வருவரோ? கொடுமை தான்..பெற்ற மனம் ..பாவம்..
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
13-பிப்-202020:09:50 IST Report Abuse
S.Ganesan படிப்பதற்கு நெகிழ்ச்சியாக உள்ளது. மகளை இழந்த சோகத்தை தாங்கும் சக்தியை ஆண்டவன் அந்த தாய்க்கு அருளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
13-பிப்-202019:32:42 IST Report Abuse
swaminathan நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதைத்தான் காட்டி ரசிக்கும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியாக ஆக்குவது என்று ஒரு வரையறை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X